சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத அமாவாசையையொட்டி திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இங்கு அமாவாசை, பவுா்ணமி, பிரதோஷம் ஆகிய நாள்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சித்திரை மாத அமாவாசையையொட்டி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூா்த்தி, பிலாவடி கருப்பசாமி, 18 சித்தா்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சதுரகிரி கோயிலில் பங்குனி மாத பௌா்ணமி வழிபாடு

சித்தலூா் அம்மன் கோயிலில் அமாவாசை பூஜை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


