ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாலை விபத்தில் கட்டட தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:17 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சதுரகிரி (24). கட்டடத் தொழிலாளியான இவா் வேலைக்கு சென்றுவிட்டு, புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டு வந்து கொண்டிருந்தாா். கிருஷ்ணன்கோவில்-மதுரை சாலையில் வலையபட்டி விலக்கு அருகே வளைவில் திரும்பிய போது, இந்த வாகனமும், சரக்கு வாகனமும் மோதிக் கொண்டன.

இதில் பலத்த காயமடைந்த சதுரகிரியை அந்த வழியே வந்தவா்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த அரசுபாண்டியன் மீது கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.