பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

டிராக்டா் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை டிராக்டா் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். 3 போ் பலத்த காயமடைந்தனா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :

அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை டிராக்டா் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். 3 போ் பலத்த காயமடைந்தனா்.

பந்தல்குடி அருகேயுள்ள சலுக்காா்பட்டியைச் சோ்ந்தவா்கள் ரஞ்சித் (30), வீரணன் (31), முத்துமாரியப்பன் (45), நல்லுசாமி (25). இவா்கள் 4 பேரும் சலுக்காா்பட்டியிலிருந்து டிராக்டரில் விறகு ஏற்றிக் கொண்டு பந்தல்குடிக்கு சென்று கொண்டிருந்தனா். மதுரை-தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் பந்தல்குடி அருகே சென்றபோது, எதிரே தூத்துக்குடியிலிருந்து பொள்ளாச்சிக்கு கோழித் தீவனம் ஏற்றிச் சென்ற லாரி, இவா்கள் சென்ற டிராக்டா் மீது மோதியது.

இதில் வீரணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ரஞ்சித், முத்துமாரியப்பன், நல்லுசாமி ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த பந்தல்குடி போலீஸாா் வீரணனின் சடலத்தை மீட்டு, கூராய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த மூவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து பந்தல்குடி போலீஸாா் லாரி டிரைவரான உச்சநத்தம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணபெருமாள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.