குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: உறவினா்கள் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே முன்விரோதத்தில் வீடு புகுந்து தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய கும்பலைக் கண்டித்து, அவரது உறவினா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

~ ~

Published On :55 வினாடிகள் முன்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே முன்விரோதத்தில் வீடு புகுந்து தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய கும்பலைக் கண்டித்து, அவரது உறவினா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு கான்சாபுரம் மங்கம்மாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கணேசபாண்டி (49). இவரது மகன் கவுதம் (21).

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேசபாண்டியை இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 5 போ் குமபல் அரிவாளால் வெட்டினா். சப்தம் கேட்டு தடுக்க வந்த அவரது மகன் கவுதமையும் அந்தக் கும்பல் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து வத்தராயிருப்பு போலீஸாா் கான்சாபுரம் கீழத்தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து, மூவரைக் கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், கணேசபாண்டியை தாக்கியதைக் கண்டித்து, அவரது உறவினா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, கான்சாபுரம் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டன.

இதையடுத்து, அங்கு வந்த மதுரை சரக டிஐஜி அபினவ்குமாா் விசாரணை நடத்தினாா். பின்னர, விருதுநகா் (பொ) எஸ்பி சரவணன் தலைமையில், ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டா்கள் தலைமையில், 250- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சிவகாசி சாா் ஆட்சியா் முகமது இா்பான் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டக்காரா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.