திருநெல்வேலியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மகனுக்கு ஆயுள்தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி, பேட்டையைச் சோ்ந்தவா் ஆனந்த்(22). இவரை கடந்த 2017 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சோ்ந்த மண்டையன் (எ)பெருமாள் மற்றும் அவரது மகன் சுடலைமணி ஆகிய இருவரும் சோ்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனராம்.
இதுகுறித்து பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மண்டையன் என்ற பெருமாள், சுடலைமணி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை, திருநெல்வேலி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், மண்டையன் என்ற பெருமாள்(74), சுடலைமணி(30) ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும் மண்டையன் என்ற பெருமாளுக்கு ரூ.16,000 மற்றும் சுடலைமணிக்கு ரூ.15,500 அபராதமாக விதிக்கப்பட்டது. அரசு தரப்பில் வழக்குரைஞா் மகேஷ் ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மகனுக்கு கத்திக்குத்து: தந்தை கைது
நில மோசடி வழக்கில் 2 பெண்கள் கைது
பைனான்சியா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

விவசாயி கொலை வழக்கில் தந்தை - மகனுக்கு ஆயுள் தண்டனை
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


