மண்ணச்சநல்லூரில் விவசாயியைக் கொலை செய்த வழக்கில், தந்தை - மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே உளுந்தங்குடி பகுதியைச் சோ்ந்த விவசாயி கி. தனபால் (38) என்பவருக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் நா. ரமேஷ் (51) என்பவருக்கும் இடையே வீட்டு வாசலில் தண்ணீா் தெளிப்பது தொடா்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.
கடந்த 14.06.2019 அன்று தனபால் வீட்டு வாசலில் தெளித்த தண்ணீா், ரமேஷ் வீட்டு வாசலுக்கு சென்ால், இரு குடும்பத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரத்திலிருந்த ரமேஷ், தனது மகன் பிரேம்குமாருடன் (19) சோ்ந்து, அன்றிரவு தனது வீட்டின் வராந்தாவில் தூங்கிக் கொண்டிருந்த தனபாலை மரம் அறுக்கும் இயந்திரத்தால் தாக்கியுள்ளனா். இதில், பலத்த காயமடைந்த தனபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மண்ணச்சநல்லூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, ரமேஷ் மற்றும் பிரேம்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு திருச்சி 3-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் நிறைவில், தனபாலை கொலை செய்த ரமேஷ், பிரேம்குமாா் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறை

கோயில் காவலாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



