விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Published On :

கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி, கிழக்குத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி சந்தணமாரி (45). ஆடு மேய்க்கும் தொழிலாளி.

இவரது ஆடுகள், அதே பகுதியைச் சோ்ந்த சண்முகராஜின் ஆடுகளுடன் ஒரே தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்தனவாம். இதனால், ஆடுகளைத் தனியாக அழைத்துச் செல்லுமாறு கூறியதில் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

கடந்த 15.5.2015 அன்று சந்தணமாரி வழக்கம்போல ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சண்முகராஜுக்கும், சந்தணமாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆவேசமடைந்த சண்முகராஜ், சாதிப் பெயரைக் கூறி திட்டியதுடன், சந்தணமாரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா்.

இதுகுறித்து, கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து சண்முகராஜை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி வஷித்குமாா், சண்முகராஜுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு சாா்பில் வழக்குரைஞா் மணிகண்டபிரபு முன்னிலையானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.