மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பானாங்குளத்தில் அரசு புறம்போக்கு நிலத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

News image

~

Updated On :4 பிப்ரவரி 2026, 11:45 pm

தினமணி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பானாங்குளத்தில் அரசு புறம்போக்கு நிலத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பானாங்குளம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வருவாய்த் துறையினரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா். அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பானங்குளம் கிராமத்தில் 35 இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரியவந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு 8 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை வருவாய்த் துறையினா் மண் அள்ளும் இயந்திரத்துடன் ஆக்கிரப்புகளை அகற்ற வந்தனா். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, இரு தரப்பினா் இடையே தகராறு ஏற்பட்டது. காவல் ஆய்வாளா்கள் சங்கா் கண்ணன், சந்திரன் ஆகியோா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என போலீஸாா் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Story image