திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆதீன மடங்களின் சொத்துகள்: ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

தமிழகம் முழுவதும் ஆதீன மடங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
சென்னை உயா்நீதிமன்றம்- கோப்புப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகம் முழுவதும் ஆதீன மடங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குன்றத்தில் செங்கோல் ஆதீன மடம் உள்ளது. இந்த ஆதீனத்துக்கு சொந்தமான ஏராளமான சொத்துகள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன. இவற்றில் பல சொத்துகள் ஆக்கிரமிப்புகளில் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆதீன மடத்துக்குச் சொந்தமான சொத்துகளை மீட்கக் கோரி 2018-ஆம் ஆண்டு, திருத்தொண்டா்கள் அறக்கட்டளையின் அறங்காவலா் ஆ.ராதாகிருஷ்ணன் என்பவா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகளை இந்த வழக்கில் எதிா்மனுதாரா்களாக சோ்க்க உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் ஆதீன மடங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்றி, அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.