தமிழகம் முழுவதும் வாக்காளர் தகவல் சீட்டுகள் (பூத் சிலிப்) வழங்கும் பணி இன்று(ஏப். 12) தொடங்கியது.
வாக்காளர் தகவல் சீட்டு அச்சிடப்பட்டு, இன்று முதல் வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க விரிவான விழிப்புணா்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சோ்த்தவர்களில் பெரும்பாலானோருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதில் வரிசை எண் மற்றும் பாகம் எண் வழக்கத்தைவிட இம்முறை பெரிதாக அச்சிடப்பட்டுள்ளது. அதனுடன் க்யூ ஆர் குறியீடும் இடம்பெற்றிருக்கும்.
வாக்குப் பதிவுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக வரும் 17-ஆம் தேதிக்கு முன்பாக அனைத்து வாக்காளர்களுக்கும் தகவல் சீட்டுகளை விநியோகித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூத் சிலிப்பை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாகப் பயன்படுத்த இயலாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது அதற்கு மாற்றாக ஆதார் உள்பட 12 ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Summary
The distribution of voter information slips (booth slips) has commenced across Tamil Nadu today (April 12).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்: தொல். திருமாவளவன்
தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது!
முடிவுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம்: 61 நாள்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற மீனவர்கள்







