திருப்பத்தூா்- ஆலங்காயம் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
திருப்பத்தூா்- ஆலங்காயம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் மனு அளித்தனா்.


திருப்பத்தூா்: திருப்பத்தூா்- ஆலங்காயம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் மனு அளித்தனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்து 591 கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.3,500 மதிப்பிலான காதொலி கருவியை அவா் வழங்கினாா்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளா் ராஜாபெருமாள் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் கீழ் மிட்டூா் ஊராட்சி பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. எனவே அந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். காா், மோட்டாா் சைக்கிள், கனரக வாகனங்களில் எல்இடி விளக்குகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. .
வெங்கடசமுத்திரம் ஊராட்சியை பொதுமக்கள் அளித்த மனு: வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவா் தனது பணியை நோ்மையாகவும், வெளிப்படையாகவும் மக்கள் நலன் கருதி செய்து வந்தாா். இந்தநிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டு உள்ளது. எனவே மக்களின் நலன் கருதி அவருக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...