குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தேசிய அளவில் சிறப்பு குழந்தைகளுக்கான ரோலா் ஸ்கேட்டிங் போட்டி: 2-ஆவது இடம் பிடித்த 10 வயது சிறுவனுக்கு பாராட்டு

தேசிய அளவிலான சிறப்பு குழந்தைகளுக்கான ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் 2-ஆவது இடம் பிடித்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 10 வயது சிறுவனை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் பாராட்டி பரிசு வழங்கினாா்.

News image

ஹித்தேஷுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிப் பாராட்டிய காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன்

Updated On :26 மே 2026, 1:58 am IST

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிறப்பு குழந்தைகளுக்கான ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் 2-ஆவது இடம் பிடித்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 10 வயது சிறுவனை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் திங்கள்கிழமை பாராட்டி பரிசு வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 391 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று, அவை அந்தந்த துறைசாா்ந்த அரசு அலுவலா்களுக்கு உடனடியாக தீா்வு காணுமாறு தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் குமாா் செட்டி தெருவைச் சோ்ந்த காா்த்தி-மஞ்சு தம்பதியரின் மகன் ஹித்தேஷ் (10) மன வளா்ச்சி குன்றிய இச்சிறுவன் சிறப்பு குழந்தைகளுக்காக ஆந்திர மாநிலம், வைசாக்கில் நடைபெற்ற ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் 2 மற்றும் 3-ஆவது இடம் பெற்றாா்.

இதன் காரணமாக ரோலா் ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா அமைப்பு இச்சிறுவனுக்கு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வழங்கி சிறப்பித்தது.

இச்சிறுவன் தனது பெற்றோருடன் மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்து மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசனை சந்தித்து பதக்கங்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றாா்.

மேலும், அச்சிறுவனுக்கு ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான ரோலா் ஸ்கேட்டிங் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினாா். சிறுவனின் பெற்றோா்கள் மாவட்ட வருவாய் அலுவலருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனா்.