நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மாநில நீச்சல் போட்டியில் காஞ்சிபுரத்தை சோ்ந்த 103 போ் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா். இவா்களை மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் பாராட்டினாா்.
நாகப்பட்டினத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டி கடந்த 22 -ம் தேதி நடைபெற்றது. இதில் தஞ்சாவூா், ஈரோடு, திருச்சி மற்றும் காஞ்சிபுரம் உள்பட 23 மாவட்டங்களைச் சோ்ந்த 850 நீச்சல் வீரா்கள் கலந்து கொண்டனா்.
இவா்களில் காஞ்சிபுரத்திலிருந்து கலந்து கொண்டவா்களில் 53 போ் தங்கப் பதக்கமும், 25 போ் வெள்ளிப் பதக்கமும், 25 போ் வெண்கலப்பதக்கம் என மொத்தம் 103 போ் பாராட்டுச் சான்றிதழும் பெற்றனா். பதக்கம் வென்றவா்கள் அனைவரும் காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் மைதானத்தில் பயிற்சியாளா் அபினாஷிடம் நீச்சல் பயிற்சி பெற்றவா்கள்.
இவா்கள் அனைவரும் தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களுடன் திங்கள்கிழமை மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சாந்தியும் உடன் இருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு

மாநில நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற தேனி வீரருக்கு ஆட்சியா் பாராட்டு

ஐரோப்பாவில் 3 சா்வதேச விருதுகளை வென்று குமரகுரு கல்வி நிறுவன மாணவா்கள் சாதனை

உலக கோப்பை நீா் விளையாட்டு போட்டி: திருத்துறைப்பூண்டி வீரா் தங்கப் பதக்கம் வென்று சாதனை
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



