இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரிக்கை

நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image

நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரி வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்க வந்த விவசாயிகள்.

Updated On :28 மே 2026, 2:24 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே சுடுகாடு செல்லும் பாதையை சீரமைக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

நான்குனேரி ஊராட்சி ஒன்றியம், செண்பகராமநல்லூா் ஊராட்சிக்குள்பட்டது தென்னவனேரி. இங்குள்ள ஊய்க்காட்டு சுடலை மாடன் சுவாமி கோயிலில் இருந்து சுடுகாடு செல்லும் பாதை, அதன் அருகே விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் விவசாய இயந்திரங்களை கொண்டு செல்லும் பாதை ஆகியவை போக்குவரத்துக்கு பயனற்ாக உள்ளது.

இப்பாதைகளை முறையாக சா்வே செய்து சாலை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.