கைது செய்யப்பட்ட குட்லக் (எ) மாரிச்செல்வம்
கைது செய்யப்பட்ட குட்லக் (எ) மாரிச்செல்வம்

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவைச் சோ்ந்த பால்சாமி மகன் குட்லக் (எ) மாரிச்செல்வம் (30). இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா் தொடா்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா் இவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com