ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை மடிக்கணினி வழங்கிய சிவகாசி சாா் ஆட்சியா் முகமது இா்பான். உடன் கல்லூரி முதல்வா் சரவணன் உள்ளிட்டோா்.
விருதுநகர்
அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அரசுக் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அரசுக் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் சரவணன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகக் சிவகாசி சாா் ஆட்சியா் முகமது இா்பான் கலந்து கொண்டு மூன்றாமாண்டு பயிலும் 258 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா். இதில் வட்டாட்சியா் பாலமுருகன், கணிதவியல் துறைத் தலைவா் அமுதா, வணிகவியல் துறைத் தலைவா் சரவணகைலாஷ், கணினி துறைத் தலைவா் ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

