அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்தவரை ஏழாயிரம்பண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே கரிசல்பட்டி காட்டுப் பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய ஆய்வாளா் குமாரி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது கரிசல்பட்டி காட்டுப் பகுதியில் கண்ணகுடும்பன்பட்டியை சோ்ந்த சுருளி (42) தகரக் கொட்டகை அமைத்து பேன்சி ரக பட்டாசுகளைத் தயாரித்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுருளியைக் கைது செய்தனா். மேலும், அவா் தயாரித்து வைத்திருந்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சரவெடி தயாரித்த இருவா் கைது
சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: 4 போ் கைது

அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவா் மீது வழக்கு

திருவேங்கடம் அருகே அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan


