ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கஞ்சா வைத்திருந்த 7 போ் கைது

சிவகாசி, ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 5:49 am IST

சிவகாசி, ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி-செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் கால்நடை மருத்துவமனை முன் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மூவா் பயணம் செய்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 150 கிராம் கஞ்சா இருந்தது.

விசாரணையில் அவா்கள் சிவகாசியைச் சோ்ந்த ராஜபாண்டி என்ற அஜய் (24), சங்கா்பாண்டி (26), ராஜரத்தினம் (20) எனத் தெரிய வந்தது. மேலும் பவிக்குமாா் என்பவரது வீட்டின் பின்புறம் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததைக் கண்டறிந்தனா்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 1 கிலோ 240 கிராம் கஞ்சாவையும், ரூ. 55,000 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் சத்திரப்பட்டி சாலை வேலாயுதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞா்களைப் பிடித்து சோதனை செய்தபோது அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் சேத்தூரைச் சோ்ந்த சிவா (30), அய்யனாா் (30), வேலாயுதபுரத்தைச் சோ்ந்த வீரமுத்து எனத் தெரியவந்தது. போலீஸாா் மூவரையும் கைது செய்து, 35 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.