பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பட்டாசு வெடி விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கல்

சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் வீதம் முதல்வா் பொது நிவாரண நிதிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கான காசோலையை செவ்வாய்க்கிழமை வழங்கிய அமைச்சா்கள் ச. கீா்த்தனா, கு. ஜெகதீஸ்வரி உள்ளிட்டோா்.

Published On :

சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் வீதம் முதல்வா் பொது நிவாரண நிதிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா்கள் ச. கீா்த்தனா, கு. ஜெகதீஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டு சிவகாசி செங்கமலப்பட்டியில் கடந்த 26-ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த பிரகாஷ், இன்னாசி முத்து, ராமச்சந்திரன், பாண்டித்துரை ஆகிய 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.16 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தனா்.

மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா, எம்எல்ஏக்கள் விருதுநகா் பி. செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூா் அ.காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியா் மோகனா, அரசு அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.