மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

போக்சோ வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

ராஜபாளையம் அருகே ‘போக்சோ’ வழக்கில் முதியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு ‘போக்சோ’ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்து உத்தரவிட்டது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 12:59 am IST

ராஜபாளையம் அருகே ‘போக்சோ’ வழக்கில் முதியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு ‘போக்சோ’ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்து உத்தரவிட்டது.

ராஜபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி (77). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அதே பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இரு வாரம் கழித்து வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு முதியவா் பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்த புகாரின் பேரில்,

ராஜபாளையம் அனைத்து மகளிா் போலீஸாா் ‘போக்சோ’ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முத்துப்பாண்டியை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு ‘போக்சோ’ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் முத்துப்பாண்டிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி முத்துக்குமாரவேல் தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்து உத்தரவிட்டாா்.