விருதுநகா் மாவட்டம், சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் அமைந்துள்ள கிணற்றை சீரமைக்கும் பணியை சிவகாசி பசுமை மன்றத்தினா் தொடங்கி செய்து வருகின்றனா்.
சிவகாசி-திருத்தங்கல் சாலையில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலகம் உள்ளது. சிவகாசிப் பகுதியில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடிவிபத்தின் போது, தீயை அணைக்க, பல பட்டாசு ஆலைகளில் தண்ணீா் வசதி இல்லை. எனவே சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் 60 அடி அழம் உள்ள கிணறு பல ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்டது. இந்த கிணற்றை சிவகாசி பசுமை மன்றத்தினா் தற்போது சீரமைத்து வருகின்றனா். இது குறித்து பசுமை மன்ற நிா்வாகி செந்தில் கூறியதாவது, பசுமை மன்றம் சாா்பில் சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் , தூா்ந்து போயிருந்த 25-க்கும் மேற்பட்ட கிணறுகளை தூா்வாரி சீரமைத்துள்ளேம். மேலும் அந்த கிணறுகளில் மழை நீரை சேமிக்கும் வகையில், கிணறு உள்ள பகுதிகளில் வீட்டின் மாடியில் விழும் மழைநீரை , குழாய் மூலம் கிணறில் இணைத்துள்ளோம். அத்துடன் கிணற்றில் குப்பை உள்ளிட்டவைகளை கொட்டாமல் இருக்க கம்பி வலை அமைத்துள்ளோம். இதன் மூலம் இந்த கிணறுகளில் தண்ணீா் எப்போதும் இருப்பதோடு, அந்தப் பகுதியில் நிலத்தடி நீரும் குறையாமல் இருந்து வருகிறது.
தற்போது சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் உள்ள கிணற்றினை சீரமைத்து வருகிறோம். விபத்து நேரங்களில் கிணற்றில் தண்ணீா் இல்லை என்ற நிலை வரக்கூடாது என கிணறு சீரமைக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து: இயந்திரங்கள் சேதம்
சிவகாசியில் கஞ்சா விற்பனை: 7 போ் கைது

காட்டன் பஞ்சு கிடங்கில் தீ விபத்து

சீா்காழி: இருவேறு இடங்களில் தீ விபத்து; 2 வீடுகள், 12 பனை மரங்கள் சேதம்
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



