ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா வழக்கில் பெண் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வன்னியம்பட்டி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் போதைப் பொருள் விற்பனை தடுப்பு தொடா்பாக ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது வன்னியம்பட்டி விலக்கு - மொட்டமலை சாலையில் உள்ள மேல்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த வைத்தியலிங்கபுரத்தைச் சோ்ந்த ராமநாதன் (37) என்பவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, பேச்சியம்மாள் (45) என்பவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் கருப்பாயி, முத்துமாரி ஆகிய இருவரை தேடி வருகின்றனா். முனியாண்டி மீது கஞ்சா விற்பனை உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளும், கருப்பாயி மீது 14 கஞ்சா வழக்குகளும், முத்துமாரி மீது 5 கஞ்சா வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
கஞ்சா விற்ற மூதாட்டி பெண் கைது!

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

கஞ்சா விற்ற பெண் உள்பட இருவா் கைது

ஆடு திருட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan


