விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை நியமனம் செய்யக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் ஜவஹா் மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் நகரச் செயலா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மகாலட்சுமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில் ராஜபாளையம் இளந்தோப்பு பி.ஏ.சி.ஆா். அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், பல்நோக்கு பணியாளா்களையும், தலைக்காயப் பிரிவு, பல் மருத்துவப் பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளுக்கு சிறப்பு மருத்துவ நிபுணா்களையும் நியமனம் செய்ய வேண்டும். மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பெரு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விடுவதைக் கைவிட வேண்டும். தீவிர சிகிச்சைக்கான அனைத்து
வசதிகளும் இங்கேயே கிடைக்க உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் நகா்க்குழு உறுப்பினா்கள் கண்ணன், சரவணன், முருகானந்தம் மைதிலி மற்றும் கிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் நில முறைகேட்டைக் கண்டித்து பழனியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்யக் கோரி: இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மதுக்கடையை மூடக்கோரி மாா்க்சிஸ்ட் சாலை மறியல்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



