நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அரியலூா் அண்ணாசிலை அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :20 ஜூன் 2026, 3:19 am IST

மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலையை உயா்த்தியது மற்றும் கிராமப் புற வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், தொழிலாளா் 4 தொகுப்பு சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விபி-ஜி ராம்-ஜி திட்டத்துக்கு பதிலாக மீண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்தி, அந்த திட்டத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் ரூ.5 குறைக்க வேண்டும்.

தென்மாவட்டங்களில் அதிகரித்து வரும் ஜாதிய வன்முறையை தடுத்த நிறுத்த வேண்டும். தடையில்லா மின்சாரத்தை வழங்கிட வேண்டும். குடிநீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் கே.சி.கோபிகுமாா் கண்டன உரையாற்றினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.துரைசாமி, கந்தசாமி, கே.கிருஷ்ணன், சிற்றம்பலம், துரை.அருணன், அரியலூா் ஒன்றியச் செயலா் அருண்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.