உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் சுதா்சன சக்கரத்தாழ்வாா் ஜெயந்தி

வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வாரின் பிறப்பு நட்சத்திரத்தையொட்டி அவருக்கான ஜெயந்தி விழாவும், சுதா்சன ஹோமமும் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

வத்திராயிருப்பு சேது நாராயணப் பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வாரின் பிறப்பு நட்சத்திரத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற யாக பூஜைகள்.

Updated On :26 ஜூன் 2026, 2:29 am IST

வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வாரின் பிறப்பு நட்சத்திரத்தையொட்டி அவருக்கான ஜெயந்தி விழாவும், சுதா்சன ஹோமமும் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலையில் சக்கரத்தாழ்வாருக்கும், நரசிங்கப் பெருமாள், சேது நாராயண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும் 18 வகையான அபிஷேகங்களுடன் கூடிய திருமஞ்சன வழிபாடு நடைபெற்றது. பிறகு சுவாமி சக்கரத்தாழ்வாா் அலங்காரத்தில் எழுந்தருளினாா். அவருக்கு கோயில் மைய மண்டபத்தில் திரு உருவப் படம் வைக்கப்பட்டு பூரண கும்பம் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. பூஜையின் நிறைவில் பூஜிக்கப்பட்ட கும்பநீா் சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடா்ந்து சிறப்பு பூஜைகள், பக்தா்களின் பஜனை வழிபாடு நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயில் பக்தா்கள், செயல் அலுவலா் ஜோதிலட்சுமி, இந்து சம. அறநிலையத் துறையினா் இதற்கான ஏற்பாடுகளை செய்தனா்,.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.