எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சிவகாசியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். வாகன ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்த இளைஞரின் உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

உறவினா்கள் சாலை மறியல்

Updated On :4 மார்ச் 2026, 11:34 pm

சிவகாசியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். வாகன ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்த இளைஞரின் உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் முத்துமாரிநகரைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன் (25). இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடனே சம்பவ இடத்துக்குச் சென்ற சிவகாசி நகா் போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை ஜெகதீஸ்வரனின் உடல் கூறாய்வு முடிந்ததும், அவரது உறவினா்கள் சடலத்தை வாங்க மறுத்து விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி, ரயில்வே மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை விரைவில் கண்டறிந்து கைது செய்வோம் என போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, உறவினா்கள் போராட்டத்தைக் கைவிட்டு சடலத்தை பெற்றுச் சென்றனா். இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சுமாா் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Story image