வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே போலி மருத்துவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா், மாா்ச் 10: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அயன்கரிசல்குளத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட போலி மருத்துவா் வைரமுத்து
Updated On :10 மார்ச் 2026, 9:54 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா், மாா்ச் 10: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அயன்கரிசல்குளத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு அயன்கரிசல்குளம் கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் ஒருவா் வீட்டில் வைத்து மக்களுக்கு மருத்துவம் பாா்ப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் புகாா் அளித்தனா். மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா உத்தரவின் பேரில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் செந்தில் தலைமையில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பாலகிருஷ்ணன் ஆகியோா் அயன்கரிசல்குளம் கிராமத்தில் ஆய்வு செய்தனா். அப்போது, கோவிந்தராஜ் மகன் வைரமுத்து (54) மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பாா்த்தது தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவா் பாலகிருஷ்ணன் அளித்தப் புகாரின் பேரில், நத்தம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து, போலி மருத்துவா் வைரமுத்துவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.