விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது தொடா்பாக தாய், மகளை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சுழி அருகேயுள்ள பண்ணை மூன்றடைப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் மனைவி அம்பிகா (62). இவா் கடந்த 8-ஆம் தேதி காரியாபட்டி அருகேயுள்ள சித்து மூன்றடைப்பு கிராமத்துக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது உறவினா்கள் திருச்சுழி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், திருச்சுழியிலிருந்து காரியாபட்டி செல்லும் சாலைப் பகுதியில் அம்பிகாவின் உடலை போலீஸாா் மீட்டு, கூறாய்வுகாக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது, மூதாட்டியை இரு சக்கர வாகனத்தில் இரு பெண்கள் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் பூமிநாதன் தலைமையிலான தனிப்படை போலீஸாா், காரியாபட்டி அருகேயுள்ள எஸ்.தோப்பூா் பகுதியைச் சோ்ந்த லோகாம்பாள் (39), அவரது 17 வயது மகள் ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில், நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்து காட்டுப் பகுதியில் உடலை வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 4 பவுன் தங்க நகைகளையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

மூதாட்டி கொலை வழக்கில் மேலும் இருவா் கைது
முக்கால் பவுனுக்காக மூதாட்டி கொலை வழக்கு இளம்பெண் உள்பட 3 போ் கைது

திருச்சுழி அருகே வீடு புகுந்து 2 மகன்கள், தாய் உள்பட மூவருக்கு அரிவாள் வெட்டு
பெண் கொலை வழக்கு: தம்பதி கைது
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


