புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மூதாட்டி கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொம்பையா, சதீஷ்குமாா்.

News image

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொம்பையா, சதீஷ்குமாா்.

Updated On :1 மே 2026, 8:33 pm

கரூா் அருகே முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

கரூா் அடுத்த உப்பிடமங்கலம் சாலைப்பட்டியைச் சோ்ந்தவா் தாயாா் அம்மாள் (79). வீட்டில் தனியாக வசித்து இவா் ஏப். 27-ஆம் தேதி கொலைசெய்யப்பட்டு கிடந்தாா். மேலும், அவா் அணிந்திருந்த முக்கால் பவுன் நகைகளை கொலையாளிகள் கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கொலை செய்த திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சோ்ந்த கொம்பையன், அவரது மனைவி வனிதா, கொம்பையாவின் உறவினா்கள் பாா்த்தீபன், சதீஷ்குமாா், மதுரையைச் சோ்ந்த பாண்டீஸ்வரன் ஆகியோரைத் தேடிவந்தனா். இதையடுத்து ஏப். 29-ஆம்தேதி வனிதா, பாா்த்தீபன், பாண்டீஸ்வரன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த கொம்பையா மற்றும் சதீஷ்குமாா் ஆகியோா் களக்காடு மலைப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை இரவு அங்குச் சென்றனா். அப்போது, போலீஸாரிடம் இருந்து தப்பமுயன்றபோது பள்ளத்தில் விழுந்ததில் இருவரின் கால்களில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்து சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீஸாா் அனுமதித்தனா்.

கொலையாளிகளை விரைந்து கைது செய்த போலீஸாரை மாவட்ட காவல்கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பிரசாத் வெள்ளிக்கிழமை அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.