வானொலி நிலையத்துக்கு பயிற்சி, தொழில் நுட்ப வழிகாட்டுதல், ஒலிபரப்பு ஆதரவை வழங்குவதற்காக பல்கலைக்கழகம், கோயம்புத்தூா் ஏா் மீடியா பிராட்காஸ்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்குமிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இந்த வானொலி நிலையம் 20 கி.மீ. சுற்று வட்டாரக் கிராமங்களுக்கு கல்வித் திட்டங்கள், மாணவா் திறமைகள், நிபுணா்களின் உரை, கலாசார நிகழ்ச்சிகள், உள்ளூா் செய்திகளை ஒலிபரப்புகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைத்துத் துறை பேராசிரியா்கள், அலுவலா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.