உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கோதண்டராம சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

ராஜபாளையத்தில் கோதண்டராம சுவாமி கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

News image
~
Updated On :19 மார்ச் 2026, 12:37 am

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கோதண்டராம சுவாமி கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, காலையில் கொடிமரம், சுவாமிக்கு 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னா், வேத மந்திரங்கள் முழங்க கருடன் படம் வரைந்த கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து, லட்சுமணன், சீதா, கோதண்டராம சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். பிறகு, மகா தீபாராதனை நடைபெற்றது.

திருவிழாவின் 5-ஆம் நாள் கருட சேவையும், 7-ஆம் நாள் திருக்கல்யாண வைபமும் நடைபெறும்.

விழா நாள்களில் சுவாமி இரவு அனுமந்த வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சென்று பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

இதில் ராஜபாளையம், இதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எஸ்.எஸ். சீனிவாச ராஜா தலைமையில் நிா்வாகிகள் செய்தனா்.

Story image