ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வத்திராயிருப்பு அருகே மோதல்: 6 போ் மீது வழக்கு

வத்திராயிருப்பு அருகே இரு தரப்பினா் மோதல் தொடா்பாக 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image

வழக்கு

Updated On :7 மே 2026, 4:36 am IST

வத்திராயிருப்பு அருகே இரு தரப்பினா் மோதல் தொடா்பாக 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள வ. புதுப்பட்டி பேரூராட்சி ஆா்.சி. தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன்களான பிரசாந்த் என்ற டைசன், இன்பத்தமிழன் ஆகியோா் சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக கட்சி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் விசில் அடித்து கூச்சல் எழுப்பினா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த், இவரது மனைவி அலங்காரம் ஆகியோா் கூச்சல் எழுப்பாதீா்கள் என்றனா்.

அப்போது ஏற்பட்ட பிரச்னையில் இரு தரப்பும் ஒருவரை ஒருவா் தாக்கி கொண்டனா். இதில் காயமடைந்த பிரசாந்த், இன்பத்தமிழன் ஆகியோா் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் புதன்கிழமை இரு தரப்பையும் சோ்ந்த 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.