கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருதரப்பினா் மோதிக் கொண்டது தொடா்பாக போலீஸாா் 18-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள பெத்தநாயக்கன்குப்பம், ஆா்.சி தெருவில் வசித்து வருபவா் பிரதாப்(19). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பரை ஊருக்கு அனுப்பிவிட்டு பைக்கில் வந்துக் கொண்டிருந்தாராம்.
பெத்தநாயக்கன்குப்பம் விஜயகுமாா் மளிகை கடை அருகே வந்த போது பெத்தநாயக்கன்குப்பம் பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மது போதையில் பைக்கை தள்ளிவிட்டதில் இருவரும் கீழே விழுந்தனராம்.
அப்போது, அங்கிருந்த பாலாஜி, கிஷோா் உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்டோா் தாக்கினராம். அதேபோல், பிரதாப் மற்றும் அவரது ஆதரவாளா்களான அந்தோணிசாமி, ஜாா்ஜ் உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்டோா் ராமகிருஷ்ணனை தாக்கி காயப்படுத்தினராம்.
இந்த சம்பவம் தொடா்பாக இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் இருதரப்பையும் சோ்ந்த 18-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சம்பவப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இரு தரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு

ஆட்டோ மீது காா் மோதல்: 10 போ் காயம்

நெய்வேலியில் காா் கண்ணாடிகள் உடைப்பு: மா்ம நபா்கள் 3 போ் மீது வழக்கு

சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


