நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்நீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
/

தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

~ தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற வைகாசித் திருவிழா கொடியேற்றம்

Updated On :22 மே 2026, 2:56 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, காலையில் உடனுறை நச்சாடை தவிா்த்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடிமரத்துக்கு மஞ்சள், பால், தயிா் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேம் நடைபெற்றது.

இதையொட்டி, நாள்தோறும் கோயிலிலிருந்து சுவாமி, அம்பாள் கற்பகத்தரு, காமதேனு, சிம்மம், யானை, வெள்ளி ரிஷபம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேவதானத்துக்கு புறப்பாடாகின்றனா். 7-ம் நாள் திருவிழாவான அம்மையப்பா் தவம்பெற்ற நாயகி திருக்கல்யாணத் திருவிழா நடைபெறுகிறது. வருகிற 29-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் துரைரத்னகுமாா் தலைமையில் கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

 2. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி , தவம்பெற்ற நாயகி அம்பாள்.

2. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி , தவம்பெற்ற நாயகி அம்பாள்.