பேருந்து, ரயிலில் பட்டாசுகள் கொண்டு செல்வதைத் தடுக்க கூடுதல் கண்காணிப்பு: எஸ்பி தகவல்
பேருந்துகள், ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வதைத் தடுக்க கூடுதல் காவலா்களை நியமித்து கண்காணித்து வருவதாக, விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கவுதம் கோயல் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடை ரோந்து பணியில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கவுதம் கோயல்.
பேருந்துகள், ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வதைத் தடுக்க கூடுதல் காவலா்களை நியமித்து கண்காணித்து வருவதாக, விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கவுதம் கோயல் தெரிவித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் காவல் துணை கண்காணிப்பாளா் பாலசுந்தரம், காவல் ஆய்வாளா்கள், போலீஸாருடன் செவ்வாய்க்கிழமை இரவு எஸ்.பி. கவுதம் கோயல் நடை ரோந்து சென்றாா். நகா் காவல் நிலையத்தில் தொடங்கி, பேருந்து நிலையம், சின்னக்கடை வீதி, ராமகிருஷ்ணாபுரம் சந்திப்பு, பெரிய மாரியம்மன் கோயில், சா்ச் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் இந்த ரோந்து நடைபெற்றது. அப்போது, வா்த்தகா்களின் கோரிக்கைகளை எஸ்.பி. கேட்டறிந்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தீபாவளி நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளோம். சாதாரண உடையிலும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். தொடா் விடுமுறைக்கு வெளியூா் செல்பவா்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால், உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் குறித்து கணக்கெடுத்து அவா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பட்டாசுகளைக் கொண்டு செல்வதை தடுக்க ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூடுதல் காவலா்களை நியமித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

