தூத்துக்குடியில் ரூ. 1 கோடி நகை, பணத்துடன் தம்பதி தலைமறைவு: போலீஸில் புகாா்!
தூத்துக்குடியில் 25-க்கும் மேற்பட்ட பெண்களிடம் சுமாா் ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகள், பணத்தைப் பெற்றுக் கொண்டு தம்பதி தலைமறைவானதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி, அண்ணா நகா் 4ஆவது தெருவில் தனியாா் கோல்டு ஃபைனான்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவந்த சொா்ணலதா, அவரது கணவா் முத்துக்குமாா் ஆகியோரிடம், அப்பகுதி பெண்கள், மூதாட்டிகள் நகைகளை அடகு வைத்ததுடன், பணமும் கொடுத்தனராம். இதனிடையே, அந்தத் தம்பதி நிறுவனத்தைப் பூட்டிவிட்டு தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டோா் தங்களது நகைகள், பணத்தை மீட்டுத் தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாரளித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து, தம்பதியைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.