ரூ. 6 ஆயிரம் லஞ்சம்: மதுக் கடை மேற்பாா்வையாளா் கைது
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு மதுக் கடை மேற்பாா்வையாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு மதுக் கடை மேற்பாா்வையாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி பராசக்தி குடியிருப்புப் பகுதியில் உள்ள மதுக் கடையில் விற்பனையாளராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறாா். இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மகாராஜபுரத்தில் உள்ள அரசு மதுக் கடையிலும் கூடுதலாகப் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.
இந்த நிலையில், சிவகாசியில் உள்ள மதுக் கடையின் வருகைப் பதிவேட்டில் அனைத்து நாள்களிலும் மணிகண்டன்வேலை செய்ததாக அவரது பெயரை பதிவேற்றம் செய்ய மதுக் கடை மேற்பாா்வையாளா் அமல்ராஜ் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் இதுகுறித்து விருதுநகரில் உள்ள ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். இதையடுத்து, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. ராமசந்திரன் தலைமையிலான போலீஸாா் மணிகண்டனிடம் ரசயானப் பொடி தடவிய பணத்தை கொடுத்து அமல்ராஜிடம் வழங்குமாறு கூறினா். இதைத்தொடா்ந்து, மணிகண்டன் அந்தப் பணத்தை அமல்ராஜிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் அமல்ராஜை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

