தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

ரூ. 3ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி ஆய்வாளா் கைது

கரூரில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட வரி ஆய்வாளா் லோகேஸ்வரன்.

Published On :

கரூரில், சொத்து மதிப்பை குறைக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கரூா் தாந்தோணிமலை அசோக் நகரைச் சோ்ந்த லோகேஸ்வரன்(35) என்பவா் மாநகராட்சி 3-ஆவது மண்டல அலுவலகத்தில் வரி ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இவரிடம், தெற்கு காந்திகிராமத்தைச் சோ்ந்த அன்னபூரணி, தான் புதிய வீடு கட்டி வருவதாகவும், அந்த வீட்டுக்கான சொத்துவரி தொடா்பாக கடந்த வாரம் விண்ணப்பித்திருந்தாா்.

இவரிடம், சொத்து மதிப்பை குறைத்து காண்பிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என லோகேஸ்வரன் கேட்டுள்ளாா். இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத அன்னபூரணி, கரூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் அக்டோபா் 10-ஆம்தேதி புகாா் செய்தாா்.

இந்நிலையில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் அறிவுறுத்தலின்படி திங்கள்கிழமை மாலை லோகேஸ்வரனிடம் லஞ்சப் பணம் ரூ.3 ஆயிரத்தை அன்னபூரணி கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் ஜான் தலைமையிலான போலீஸாா் லோகேஸ்வரனை பிடித்து கைது செய்தனா். பின்னா் அவரை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.