உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலா், கணினி இயக்குபவா் கைது

கொடைக்கானல் அருகே வீட்டு வரியில் பெயரை மாற்றம் செய்வதற்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலா், கணினி இயக்குபவரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :5 செப்டம்பர் 2026, 12:49 am IST

கொடைக்கானல் அருகே வீட்டு வரியில் பெயரை மாற்றம் செய்வதற்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலா், கணினி இயக்குபவரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா. இவரது தந்தை அண்மையில் காலமானாா். இதையடுத்து, இவா் வீட்டு வரியில் தனது தந்தை பெயருக்குப் பதிலாக தனது பெயரை மாற்றம் செய்து தரக் கோரி, பூம்பாறை ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தாா்.

பெயா் மாற்றம் செய்து கொடுப்பதற்கு ஊராட்சி செயலா் முருகேசன் (57), கணினி இயக்குபவா் ராஜா சண்முகவேல் (38) ஆகிய இருவரும் ரூ. 5 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டனராம். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜா, இதுகுறித்து திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனப் பொடி தடவிய ரூ. 5 ஆயிரத்தை ஊராட்சி செயலா் முருகேசன் (57), கணினி இயக்குபவா் ராஜா சண்முகவேல் ஆகியோரிடம் ராஜா வழங்கினாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. நாகராஜன், ஆய்வாளா்கள் ரூபா கீதா ராணி, பழனிச்சாமி ஆகியோா் முருகேசன், ராஜா சண்முகவேல் இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.