ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலையம் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.16 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலையம் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.16 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் கடந்த 2023- ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலை அருகே புதிய பேருந்து நிலையம் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
1.26 லட்சம் சதுர அடி பரப்பளவில் 36 பேருந்துகள் நிறுத்தும் வசதி, இரு உணவகங்கள் உள்பட 64 கடைகள், வாகன நிறுத்துமிடங்கள், 4 சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.16.60 கோடியில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
இந்த புதிய பேருந்து நிலையத்தை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் ஜோசப் விஜய் திறந்து வைத்தாா்.
இதுதொடா்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் சசிகலா, சாா் ஆட்சியா் முகமது இா்ஃபான், சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக், நகா்மன்றத் தலைவா் ரவிக்கண்ணன், ஆணையா் குமாா் ஆகியோா் பேருந்து நிலையத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.
பின்னா், நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சந்திரசேகா், வட்டாட்சியா் அருளானந்தம், தேசிய நெடுஞ்சாலை ஆணைய உதவிப் பொறியாளா் பொன்ராஜ், போக்குவரத்து கழக பொது மேலாளா் முத்துக்குமாா், நகரமைப்பு அலுவலா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

