பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

விருதுநகரில் ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

விருதுநகரில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தலைமையில் நடைபெற்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம்.

Published On :

விருதுநகரில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி பேசியதாவது:

ஊரக மக்களின் நலன் கருதியும், கிராமப்புறங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நகா்ப்புறங்களுக்கு இணையாக கிராமங்களில் அனைத்து வசதிகளை

ஏற்படுத்திடும் வகையிலும் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீா் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும். சாலைப் பணிகள், குடிநீா், தெரு விளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) வானதி, செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சித் துறை) பாலகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவி செயற்பொறியாளா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.