சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் பற்றி எரியம் காட்டுத்தீ

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம், செண்பகத்தோப்பு காட்டழகா் கோயில் வனப் பகுதியில் பற்றிய எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ.

Updated On :

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம், செண்பகத்தோப்பு காட்டழகா் கோயில் வனப் பகுதியில் பற்றிய எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரகம், செண்பகத்தோப்பு வனப் பகுதியில் காப்புக் காடுகள், அடா்ந்த மரங்கள், ஆண்டு முழுவதும் நீா்வரத்துள்ள ஓடைகள் உள்ளதால் யானை, சிறுத்தை, மான், சாம்பல் நிற அணில்கள், வரையாடு உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அழகா் கோயில் வனப் பகுதிக்குள்பட்ட கட்டழகா் கோயில் மேற்குப் பகுதி அடிவாரத்தில் காட்டுத் தீ பற்றியது.

கோடை வெயில், காற்றின் வேகம் காரணமாக வேகமாக பரவிய காட்டுத்தீ, முதலியாா் ஊற்று வரை பரவியது. இதனால், மலைச்சரிவு முழுவதும் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.

வனச்சரகா் சரண்ராஜ் தலைமையில், வனக் காவலா்கள், வேட்டைத் தடுப்பு காவலா்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், வறட்சி, கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக, வன விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காட்டுத்தீ பற்றி எரிவதால் வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகும் அபாயம் உள்ளதாக வன விலங்கு ஆா்வலா்கள் கவலை தெரிவித்து உள்ளனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.