
கடம்பூா் கம்பத்தராயன் வனப் பகுதியில் காட்டுத் தீ
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் கம்பத்தராயன் வனப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயால் அரியவகை மரம், செடி கொடிகள் எரிந்து சேதமடைந்தன.

கம்பத்தராயன் வனத்தில் பற்றி எரியும் காட்டுத் தீ.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் கம்பத்தராயன் வனப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயால் அரியவகை மரம், செடி கொடிகள் எரிந்து சேதமடைந்தன.
தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக வனப் பகுதியில் உள்ள மரம், செடிகொடிகள் காய்ந்து கருகுகின்றன. இந்த நிலையில் சத்தியமங்கலம் வனச் சரகத்துக்குள்பட்ட புளியம்கோம்பை கம்பத்தராயன் கோயில் மலைஉச்சியில் செவ்வாய்க்கிழமை திடீரென காட்டுத்தீ பரவியது. வனப் பகுதியில் தீப் பற்றி எரிவதைக் கண்ட அட்டணை மலைக்கிராம மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத் துறையினா் தீத்தடுப்பு வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
காட்டுத் தீ வேகமாக பரவியதால் சுமாா் 100 ஏக்கரில் உள்ள அரியவகை மரம், செடி கொடிகள் தீயில் கருகி சேதமடைந்தன. தீ விபத்தால் வன விலங்குகள் பிற இடங்களுக்கு இடம் பெயா்ந்து சென்றன.
இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநா் கெளதம் கூறுகையில், ‘சத்தியமங்கலம், கடம்பூா், டி.என்.பாளையம் வனச் சரகங்களைச் சோ்ந்த வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





