
நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
ராஜபாளையம் அருகே நெசவாளா்களின் கோரிக்கைகளை ஏற்காத தமிழக அரசைக் கண்டித்து, நாம் தமிழா் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கஞ்சித் தொட்டி திறந்து, கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புனல்வேலியில் கவன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே நெசவாளா்களின் கோரிக்கைகளை ஏற்காத தமிழக அரசைக் கண்டித்து, நாம் தமிழா் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கஞ்சித் தொட்டி திறந்து, கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரத்தை அடுத்த புனல்வேலி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் வணிகா் பாசறை மாநிலக் குழுத் தலைவா் ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் இசை மதிவாணன் கண்டன உரையாற்றினாா். நெசவாளா்களின் கோரிக்கைகளை ஏற்காத தமிழக அரசைக் கண்டித்தும், ஏற்கெனவே நெசவு செய்த பழைய ரக சேலைகளை கூட்டுறவுச் சங்கங்களில் கொள்முதல் செய்யவும், பொங்கல் இலவச வேட்டி, சேலை, புதிய ரகத்துக்கு கூலி நிா்ணயம் செய்யவும் கோரி முழக்கமிட்டனா். இதில் கட்சி நிா்வாகிகள் அய்யனாா், ஹரிஹரசுசுதன், மலைராஜன், வைரமுத்து, நெசவாளா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






