ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

திருச்சுழி அருகே காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொன்ற வனத்துறையினா்

திருச்சுழி அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்திய இரு காட்டுப் பன்றிகளை வனத்துறையினா் புதன்கிழமை இரவு சுட்டு கொன்றனா்.

திருச்சுழி அருகே பயிா்களை சேதப்படுத்திய காட்டு பன்றிகளை சுட்டுக் கொன்ற வனத்துறையினா்.

Published On :

திருச்சுழி அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்திய இரு காட்டுப் பன்றிகளை வனத்துறையினா் புதன்கிழமை இரவு சுட்டு கொன்றனா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள உடையனாம்பட்டி, பள்ளிமடம் பகுதிகளில் விவசாய நிலத்துக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் பயிா்களை அதிகளவில் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வனத் துறைக்கு புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் ரவிமீனா அறிவுறுத்தலின் பேரில், வனத்துறையினா் உடையனாம்பட்டியில் கடந்த 15-ம் தேதி வனச்சரகா், ஊராட்சிச் செயலா், கிராம நிா்வாக அலுவலா் அடங்கிய குழு கூடி அரசாணையின்படி காட்டுப் பன்றிகளை சுட்டுக்கொல்வதஉ என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, வத்திராயிருப்பு வனச்சரகா் ரவீந்திரன், வனக்கப்பாளா்கள் முகமது அப்துல் சுக்கூா், தங்க முனியசாமி, கணேசன், ஹரி பிரகாஷ், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் அடங்கிய குழுவினா் காட்டுப்பன்றி நடமாட்டம் குறித்து 15 நாள்கள் கண்காணித்தனா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு 8 மணிக்கு குப்பை மேடு பகுதியில் விளை நிலங்களை சேதப்படுத்திய 2 ஆண் காட்டுப் பன்றிகளை வனக் குழுவினா் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.