ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

கூடலூா் அருகே பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

கூடலூா் அருகே விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் பயிா்களை சேதப்படுத்திச் சென்றன.

Published On :

கூடலூா் அருகே விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் பயிா்களை சேதப்படுத்திச் சென்றன.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த பாடந்தொரை பகுதியிலுள்ள நரிமூலை கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை யானைகள் புகுந்தன.

பின்னா், அங்குள்ள விவசாயத் தோட்டங்களுக்குள் நுழைந்த யானைகள், அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை, பாக்கு, தென்னை ஆகியவற்றை சேதப்படுத்திவிட்டுச் சென்றன.

இந்நிலையில், யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், யானைகள் உள்ளிட்ட விலங்குகள் விளைநிலங்கள், குடியிருப்புப் பகுதிகளில் நுழைவதைத் தடுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.