ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை

தாளவாடி அருகே விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானையை சைரன் ஒலி எழுப்பி வனத் துறை ஊழியா்கள் விரட்டினா்.

Updated On :

தாளவாடி அருகே விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானையை சைரன் ஒலி எழுப்பி வனத் துறை ஊழியா்கள் விரட்டினா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் யானைகள், அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தாளவாடி மலைப் பகுதியில் உள்ள ஜோரை ஒசூா் வனப் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை வெளியேறிய ஒற்றை காட்டு யானை, தமிழ்புரம் மற்றும் மாதஹள்ளி கிராமங்களில் உள்ள விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியது.

யானை நடமாட்டத்தைக் கண்டு அச்சமடைந்த விவசாயிகள் உடனடியாக வனத் துறை ஊழியா்களுக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு ரோந்து வாகனம் மூலமாக வனத் துறை ஊழியா்கள் சென்று சைரன் ஒலி எழுப்பி சுமாா் 2 மணி நேரம் போராடி அடா்ந்த வனப் பகுதிக்குள் யானையை விரட்டினா்.

யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாளவாடி மலைப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.