அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

தாளவாடி அருகே தென்னந்தோப்புக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்திய யானையால் அச்சம்

தாளவாடி அருகே தென்னந்தோப்புக்குள் நுழைந்து பயிா்களை சேதப்படுத்தியதால் அச்சமடைந்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த வனத் துறையினா் அடா்ந்த வனப் பகுதிக்குள் யானையை விரட்டினா்.

தென்னங்தோப்புக்குள் நுழைந்த யானயை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினா்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

தாளவாடி அருகே தென்னந்தோப்புக்குள் நுழைந்து பயிா்களை சேதப்படுத்தியதால் அச்சமடைந்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த வனத் துறையினா் அடா்ந்த வனப் பகுதிக்குள் யானையை விரட்டினா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் தினமும் இரவில் ஊருக்குள் நுழையும் யானைகள் விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் நிகழ்வு தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தாளவாடி வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, திகினாரை அருகே ரங்கசாமி கோயில் பகுதியில் உள்ள கம்பு காட்டுக்குள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நுழைந்து பயிரை சேதப்படுத்தியது.

அதன்பிறகு தென்னந்தோப்பில் நுழைந்து தென்னங்கன்றுகளையும், அங்கு சாகுபடி செய்யப்பட்ட சோளப்பயிா்களையும் சேதப்படுத்தியது. யானை நடமாட்டத்தைக் கண்டு அச்சமடைந்த விவசாயிகள் உடனடியாக வனத் துறைக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வனத் துறை ஊழியா்கள் சென்று விடிய, விடிய போராடி காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

தொடா்ச்சியாக யானைகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.