75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

கூடலூா் அருகே ஓவேலி பகுதியில் ஆட்கொல்லி புலியைப் பிடிக்க வனத் துறை தீவிரம்

கூடலூா் அருகே ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

ட்ரோன் கேமரா மூலமாக புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வனத் துறையினா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 12:10 am IST

கூடலூா் அருகே ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு விவசாயி பாலசுப்பிரமணி என்பவரும், கடந்த வெள்ளிக்கிழமை விவசாயி ரவிச்சந்திரன் என்பவரும் அடுத்தடுத்து புலி தாக்கி உயிரிழந்தனா். இந்த சம்பவம் கூடலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களை மிகவும் அச்சமடையச் செய்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு வனத் துறை புலியைப் பிடிக்க உத்தரவிட்டுள்ளதால் ஒவேலி பகுதியில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 80 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இக்குழுவினா் முதுமலை புலிகள் காப்பக வனப் பாதுகாவலா் மற்றும் கள இயக்குநா் தலைமையில் கால்நடை மருத்துவா்கள், வனத் துறையினா் புலியை கூண்டு வைத்து பிடிக்க தானியங்கி கேமராக்கள், தொ்மல் ட்ரோன் 25 கேமராக்கள் பயன்படுத்தி புலியின் கால்தடங்களை அடையாளம் கண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். தேவைப்படும்பட்சத்தில் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் கால்நடை மருத்துவக் குழு தயாா் நிலையில் உள்ளது.

வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிக்கு ஓவேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பணிக்கும், கால்நடை மேய்ச்சலுக்கும், பொதுமக்கள் யாரும் தனியாக வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என வனத் துறை மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.