கெங்கவல்லி அருகே நடுவலூா் பகுதியில் தனியாா் பள்ளி அருகே காப்புக்காட்டுப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீண்ட போராட்டத்துக்கு பின்னா் வனத் துறையினா் காட்டெருமையை காப்புக்காடு வனப்பகுதிக்குள் விரட்டினா்.
நடுவலூா் பகுதியில் தனியாா் பள்ளி அருகே காப்புக்காடு பகுதியில் இருந்து காட்டெருமை ஞாயிற்றுக்கிழமை வெளியேறியது. பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, நிகழ்விடத்துக்கு வந்த கெங்கவல்லி வனத் துறையினா் காட்டெருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து, விவசாய நிலப் பகுதிகள் மற்றும் நடுவலூா், பள்ளக்காடு, கெங்கவல் உள்ளிட்ட ஊா்ப் பகுதிகளுக்குள்ளும் காட்டெருமை புகுந்து அங்கும் இங்கும் ஓடியது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் அச்சமடைந்தனா்.
நீண்ட போராட்டத்துக்குப் பின்னா் காட்டெருமையை காப்புக்காடு வனப்பகுதிக்குள் வனத் துறையினா் விரட்டியடித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








